Page Loader
கார் ரேசிங்கிற்கு செல்வதற்கு முன்னர் அஜித் கூறியது இதுதான்: இயக்குனர் மகிழ் திருமேனி
விடாமுயற்சி பிப்ரவரி 6, 2025 அன்று வெளியாக உள்ளது

கார் ரேசிங்கிற்கு செல்வதற்கு முன்னர் அஜித் கூறியது இதுதான்: இயக்குனர் மகிழ் திருமேனி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 24, 2025
10:56 am

செய்தி முன்னோட்டம்

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான விடாமுயற்சி பிப்ரவரி 6, 2025 அன்று வெளியாக உள்ளது. இந்த அதிரடித் திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் உட்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் ஒரு கட்டமாக இயக்குனர் மகிழ் திருமேனி பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் அவர் நடிகர் அஜித் பற்றி கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்

"கார் ரேசிங்கில் என்னுடைய 100% உழைப்பை தரவேண்டும்"

மகிழ் திருமேனி 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்தபோது நடிகர் அஜித் ரேசிங்கின் பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிட்டார். அப்போது இரண்டு முறை அவருக்கு விபத்து ஏற்பட்டதையும் இயக்குனர் அந்த பேட்டியின் போது தெரிவித்தார். அதோடு, அப்போது அஜித் தெரிவித்ததையும் கூறினார். "என்னை நம்பி பலர் இந்த ப்ரொஜெக்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிவேன். பந்தயத்தில், எனக்கு எதுவும் நடக்கலாம். அதனால்தான் நான் என்னுடைய பட கமிட்மெண்டுகளை அதற்கு முன் முடிக்க விரும்புகிறேன். நான் ரேசிங்கில் ஆக்ஸிலரேட்டரை 100% அழுத்த வேண்டும், 90% மட்டும் அழுத்தி பாதுகாப்பாக விளையாட விரும்பவில்லை" என்றாராம்! நடிகர் அஜித் மற்றும் அவரது அணி, துபாயில் சமீபத்தில் நடந்து முடிந்த கார் ரேசிங்கில் 3வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post