
வெற்றிமாறனின் 'விடுதலை 2' ட்ரெய்லர் மற்றும் இசை நவம்பர் 26-இல் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
வெற்றிமாறன் இயக்கியுள்ள 'விடுதலை 2' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் நவம்பர் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாகமான 'விடுதலை' கடந்த ஆண்டு மார்ச் 31 அன்று வெளியானது.
இதில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இவர்களோடு பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் போன்ற பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்தார்.
விடுதலை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது நிலையில் அதன் அடுத்த பாகத்தையும் உடனே எடுக்க துவங்கினார் வெற்றிமாறன்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
`விடுதலை-2' ட்ரைலர், பாடல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விட்ட படக்குழு | Viduthalai 2 | Vetri Maaran | Soori | Vijay Sethupathy#vijaysethupathi | #viduthalai2 | #soori | #vetrimaaran | #thanthitv pic.twitter.com/bSPQE27yw0
— Thanthi TV (@ThanthiTV) November 22, 2024
விவரங்கள்
விடுதலை 2 வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது
'விடுதலை 2' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான 'தினம் தினமும்' என்ற வெளியாகி, அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் நவம்பர் 26 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை 2 வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
முந்தைய பாகத்தில் சூரி நடித்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் 'வாத்தியார்' கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் எனவும் ஏற்கனவே வெற்றிமாறன் கூறியுள்ளார்.