நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்
பிரபல தமிழ் நடிகர் சரத் பாபு, உடல் உறுப்புகள் அழற்சி காரணமாக, பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில், அவரை ஹைதராபாதில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவருக்கு உடல் உறுப்புகளை தாக்கும், செப்சிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நோய் தொற்றின் காரணமாக, அவர் தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, ICU-வில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சரத்பாபு, கடந்த 50 வருடங்களாக திரையுலகில் உள்ளார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில், ஹீரோவாகவும், ஹீரோவின் நண்பராகவும் நடித்து பிரபலமானவர். சரத் பாபு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.