கிறிஸ்துமஸ் சீசனில் பார்க்கவேண்டிய சிறந்த 6 ஹாலிவுட் திரைப்படங்கள்
டிசம்பர் மாதம் என்றாலே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் களைக்கட்ட துவங்கிவிடும். புத்தாடைகள் வாங்குவது, வீட்டில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை செய்வது, கிறிஸ்துமஸிற்கு பிரபலமான கேக், ரம் போன்ற உணவுகளை செய்வது என அனைவரின் வீட்டிலும் கொண்டாட்டங்கள் இந்த நேரத்தில் துவங்கி இருக்கும். இயேசு கிறிஸ்து உலக மக்களை ரட்சிக்க இந்த உலகில் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவது மரபு. ஆனால் மதங்கள் தாண்டி இந்த தினம் விடுமுறை கொண்டாட்டமாகவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதையுமே பிரதானமாக பார்க்கிறார்கள் அனைவரும். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் நீங்கள் பார்க்க வேண்டிய சில சிறந்த ஹாலிவுட் படங்களை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலானவை Netflix, Prime,Disney+ மற்றும் பலவற்றில் ஸ்ட்ரீமிங் செய்கின்றன.
சிறந்த கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் - 1
Klaus (2019): இப்படத்தின் முழு பதிவும் யூட்யூபில் காணக்கிடைக்கிறது. இது 92வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. அழகான அனிமேஷனைக் கொண்டுள்ள இந்த படம் உங்களை விடுமுறையை மாயாஜாலமாக உணர வைக்கும். இந்த திரைப்படம், தனிமைப்படுத்தப்பட்ட பொம்மை தயாரிப்பாளருடன் நட்பு கொள்ளும் தபால்காரரின் கதையைச் சொல்கிறது. நெட்ஃபிலிக்ஸ்-இல் பார்க்கலாம். ஹோம் அலோன் (1990): பிரபலமான கிறிஸ்துமஸ் திரைப்படமான ஹோம் அலோன் பாக்ஸ்-ஆபிஸில் $285 மில்லியன் சம்பாதித்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. 8 வயது கெவின், கொள்ளையர்கள் வீட்டில் திருட செய்யும் திட்டங்களை தனது சாமர்த்தியத்தால் முறியடிப்பதைப் பார்த்து நீங்கள் நிச்சயமாக குதூகலமடைவீர்கள். இந்த படம் இரண்டு பாகமாக வெளியானது. இப்படம், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
சிறந்த கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் - 2
நேஷனல் லாம்பூனின் கிறிஸ்துமஸ் வெகேஷன் (1989): Youtube இல் முழு பதிவையும் பார்க்கலாம். விடுமுறை நாட்களில் உங்கள் மாமியார் வருகைக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? இந்த செவி சேஸ் திரைப்படத்தைப் பார்தால், கிறிஸ்துமஸில் உங்கள் குடும்பத்தினர் செய்யும் எதுவும் முற்றிலும் சாதாரணமாகத் தோன்றும். இப்படம், அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம். தி போலார் எக்ஸ்பிரஸ் (2004): கிறிஸ் வான் ஆல்ஸ்பர்க்கின் குழந்தைகள் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த போலார் எக்ஸ்பிரஸ் அனிமேஷன் படத்தில் டாம் ஹாங்க்ஸ் அனிமேஷன் வடிவில் இருக்கிறார். கற்பனைப் படத்தில், ஒரு சிறுவன் வட துருவத்திற்கு ஒரு மாயாஜால ரயிலில் பயணம் செய்து, விடுமுறையின் முக்கியத்துவத்தை வழியில் கண்டறிகிறான். அமேசான் பிரைம் வீடியோவில் இப்படத்தினை பார்க்கலாம்.
சிறந்த கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் - 3
The Man Who Invented Christmas (2017): பிரபல ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய எ கிறிஸ்மஸ் கரோலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில், டான் ஸ்டீவன்ஸ் நடித்துள்ளார். இப்படம், எல்லா வயதினருக்கும் ஏற்றது. எங்களை நம்புங்கள்! இப்படம், அமேசான் பிரைமில் பார்க்கலாம். சாண்டா கிளாஸ்(1994): விவாகரத்து பெற்ற தொழிலதிபர் (டிம் ஆலன்) தற்செயலாக சாண்டா கிளாஸை கொன்றுவிடுகிறார். அவர் தற்போது சாண்டாவின் இடத்தை நிரப்ப அடியெடுத்து வைக்க வேண்டும். நீங்கள் இப்படத்தின் தொடர்ச்சியை பார்க்க விரும்பினால், சாண்டா கிளாஸ் 2 மற்றும் சாண்டா கிளாஸ் 3 என அடுத்தடுத்த பகுதிகளையும் காணலாம். டிஸ்னியின் தொடரான தி சாண்டா கிளாஸ்ஸில் மேலும் காணலாம். இப்படம், அமேசான் பிரைம், டிஸ்னி+-இல் இருக்கிறது.