தமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம்
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் டோக்கியோவில் முடிவடைந்த ஒரு கட்ட படப்பிடிப்புடன், படக்குழு, அடுத்ததாக ஆப்பிரிக்காவிற்கு பறந்துள்ளது. படத்தின் முக்கிய காட்சிகளை அங்கே படமாக்க போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆப்பிரிக்கா நாட்டை படப்பிடிப்பிற்காக தேர்வு செய்வது, தமிழ் சினிமாவில் முதல் முறை அன்று. இதற்கு முன்னர் பல வெற்றி படங்கள் அங்கே படமாக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில இதோ: அயன்: KV ஆனந்த் இயக்கிய படம் தான் அயன். இந்த படத்தில் தான் முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்தார் ஆனந்த். உள்ளூர் சௌகார்பேட்டில் ராஜ்யம் செய்யும் கடத்தல்காரன், ஆப்பிரிக்கா சென்று, அங்கிருக்கும் வைர சுரங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புரட்சி படைகளுடன் கைகோர்க்கும் கதை.
மரியான் முதல் இந்தியன் 2 வரை
மரியான்: இந்த படம், தனுஷ் நடிப்பில் வெளியானது. பாலிவுட் இயக்குனர் பாரத் பாலா இயக்கத்தில், சென்ற 2013 ஆம் ஆண்டு வெளியானது. இது ஒரு செய்தி தொகுப்பில் ஈர்க்கப்பட்டு உருவான திரைப்படம் என இயக்குனர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் தென்கோடியில் வாழும் ஒரு மீனவ இளைஞன், தன்னுடைய கடனை அடைக்க சூடான் நாட்டிற்கு சென்று, அங்கே சிக்கிக்கொண்ட கதை ஆகும் இது. இந்த படம், லிபியாவில் எடுத்துள்ளார்கள். எனினும், ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில், சூடான் பாலைவனம் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியன் 2: ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டத்திற்கு குறைவே இருக்காது. ஏற்கனவே வெளியான 'இந்தியன்' படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும், இத்திரைப்படத்தில், வயதான சேனாபதி கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். படத்தின் முக்கிய சண்டைகாட்சிகளுக்காக படக்குழு ஆப்பிரிக்கா சென்றுள்ளது