"நீ பெரும் கலைஞன்..நிரந்தர இளைஞன்": வைரலாகும் கமலின் புதிய வீடியோ
கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சென்ற வாரம் வரை டோக்கியோ நகரில் படப்பிடிப்பில் இருந்த குழு, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே, படப்பிடிப்பிற்கு முன்னர், தன்னை ரிலாக்ஸ் செய்துகொண்ட கமல், அங்கிருந்த பீங்கான் உருளியில், மிருதங்கம் போல நேர்த்தியாக வாசிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்த அவரின் ரசிகர்கள், கமலுக்கு தெரியாத கலை ஏதேனும் உண்டா என வியக்கின்றனர். இந்தியன்-2 படத்தில், சேனாபதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.