LOADING...
தலைவன் தலைவி, மாரீசன் படங்களை இந்த தேதியிலிருந்து OTTயில் காணலாம்!
வரும் ஆகஸ்ட் 22 இரு படங்களும் OTTயில் வெளியாகிறது

தலைவன் தலைவி, மாரீசன் படங்களை இந்த தேதியிலிருந்து OTTயில் காணலாம்!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2025
03:22 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிய பின்னர் தற்போது OTTயில் வெளியாகவுள்ளது. வரும் ஆகஸ்ட் 22 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில், இந்த படத்தின் வெளியீட்டுடன் மோதிய ஃபஹத் ஃபாசில், வடிவேலு நடிப்பில் உருவான மாரீசன் திரைப்படமும் அதே நாளில் OTT வெளியீட்டை பெறுவது கூடுதல் சுவாரசியம். மாரீசன் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் Netflix -இல் வெளியாகவுள்ளது

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

இரண்டு படங்களை பற்றி ஒரு பார்வை

'தலைவன் தலைவி': சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியான இப்படம், உலகம் முழுவதும் ₹100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'மாரீசன்': சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், சுதீஷ் சங்கர் இயக்கிய 'மாரீசன்' படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்பில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை மட்டும் பெற்றது. இப்போது, 'மாரீசன்' நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இருப்பினும், இவ்விரு படங்களுமே தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் OTTயில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.