
ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நன்கொடை
செய்தி முன்னோட்டம்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து, மாநிலம் எங்கும் வெள்ளம் வழிந்தோடுகிறது.
இதனால் இறப்புகளும் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகளில் டோலிவுட் நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் கணிசமான நிதி உதவியை வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா ரூ.1 கோடி என ரூ.2 கோடிகளை வழங்கியுள்ளார் நடிகர் பிரபாஸ்.
அதேபோல அல்லு அர்ஜுனும் முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு ₹1 கோடி நன்கொடை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் இரு மாநிலங்களில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Donations by our #TFI Heroes#PawanKalyan – 6 Crores#Prabhas – 2 Crores#Nagarjuna – 1 Crore#AlluArjun – 1 Crore#Chiranjeevi – 1 Crore#Balakrishna – 1 Crore#MaheshBabu – 1 Crore#JrNTR – 1 Crore#Trivikram – 50 Lakhs#VyjayanthiMovies – 50 Lakhs#SiddhuJonnalagadda – Rs 30L… pic.twitter.com/Y3dp8IzE4n
— Bharati Upadhyay (@BharatiUpa30582) September 4, 2024