தமிழின் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்க வெளியீடுகள்
செய்தி முன்னோட்டம்
கடந்த வருடத்தின் டிசம்பர் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில், திரையரங்குகள் படு பிஸியாக இருந்தன. இந்நிலையில், இந்த மாதத்தின் முதல் வீக்கெண்டில் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஒரே ஒரு திரைப்படம் மட்டும் வெளியாகிறது. அடுத்த வாரம் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் தமிழ் மொழியில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஓடிடியிலும் 3 தமிழ் படங்கள் மட்டுமே இந்த வாரம் வெளியாகிறது. அவை என்னென்ன, எந்த பிளாட்பார்மில் வெளியாகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2nd card
ஸ்பைடர் இஸ் பேக்
தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு பணக்கார தொழிலதிபர் சியாங் கால், மலைக்கடியில் பத்தாயிரம் மீட்டர் ஆழத்தில் உள்ள ஸ்பைடர் நகரத்தை கண்டறிய சிமா காங், என்பவரை பிளாக் மெயில் செய்கிறார். சிமா தனது காதலி லிசா மற்றும் தந்தை சிமாஸ் உடன் கோல்டன் சிட்டியைக் கண்டுபிடிக்க, ஒரு தீவுக்குச் செல்வது படத்தின் கதை. டேய் யி லின் படத்தை இயக்கியுள்ள நிலையில், ஸ்டீவன் லியு, சென் மெங் குய் . உள்ளிட்டோர் நடித்துள்ளனர் இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் தெலுங்கில், இப்படம் ஜனவரி 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
3rd card
இந்த வார ஓடிடி வெளியிடு
லில்லி ராணி- கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இப்படம், ஜனவரி 5ஆம் தேதி ஆகா ஓடிடியில் வெளியாகிறது. விஷ்ணு இயக்கியுள்ள இப்படத்தில், ஜெயபிரகாஷ், சாயா சிங், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். அரிதான மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை தேடி, ஒரு பாலியல் தொழிலாளி பயணத்தை மேற்கொள்வது படத்தின் கதை. இப்படம் திரையரங்கில் வெளியான போது, சுமாரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
4th card
கான்ஜூரிங் கண்ணப்பன்
ஒரு மனிதனுக்கு கெட்ட கனவு வரத் தொடங்குகிறது. அந்த கனவில் வரும் விஷயங்கள் நிஜத்திலும் அவனை பாதிக்கும்போது, அவன் அவனின் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த பிரச்சனைக்கான மூல காரணத்தை கண்டறிய முயல்வது படத்தின் கதை. சதீஷ், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ரெஜினா கசாண்ட்ரா, நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள். திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்ற இப்படத்தை, செல்வின் ராஜ் சேவியர் இயக்கி இருந்தார். தற்போது, ஜனவரி 5ஆம் தேதி முதல் இப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது
5th card
ஹாய் நன்னா
தான் காதலிக்கும் பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்ளும் போது, ஒரு தந்தையும், அவரது 6 வயது மகளின் வாழ்க்கையும், வியக்கத்தக்க திருப்பத்தை அடைவது படத்தின் கதை. தெலுங்கில் நானி, மிருணாள் தாகூர், சுருதிஹாசன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை ஷூர்யுவ் இயக்கியிருந்தார். படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், கிட்டத்தட்ட ₹75 கோடியை வசூல் செய்தது. மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழிலும் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 4ம் தேதி இப்படம் நெட்ஃபிலிக்ஸ் மீண்டும் வெளியாக உள்ளது.