10 மொழிகள், 3டி இல் வெளியாகும் சூர்யாவின் கங்குவா?
செய்தி முன்னோட்டம்
'சிறுத்தை' சிவா இயக்கத்தில், சூர்யா கங்குவா எனும் பீரியாடிக் ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சமீபத்திய அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தற்போது படக்குழு கங்குவா திரைப்படத்தை 10 மொழிகளிலும், 3டியிலும் வெளியிட பரிசளித்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது.
மேலும், படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென்ற சூர்யா ரசிகர்களின் கோரிக்கையையும், படக்குழு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
கங்குவா படத்தில் சூர்யாவுடன், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இப்படத்திற்காக, சூர்யா கடுமையாக உழைத்து வருவதாக இயக்குனர் சிவா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
10 மொழிகளில் கங்குவா திரைப்படம்
#Suriya's #Kanguva IMAX plans ON✅🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) November 15, 2023
Already the movie is going to be released in 3D & 10 languages 💥
If the content clicks, a big Blockbuster loading 💯 pic.twitter.com/2Xk4XU0ir8