Page Loader
புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம்
சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம்

புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2023
04:13 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில், GV பிரகாஷ் இசையில், வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், அதிக வசூல் பெற்றது மட்டுமின்றி, சிறந்த திரைப்படம், நடிகர், இசை என பல விருதுகளை வென்றது. இதனை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக சில வாரங்களுக்கு முன்னர் ஜிவி.பிரகாஷ் தெரிவித்திருந்தார். அதை போலவே, 2D நிறுவனமும் இந்த படத்தை பற்றி இன்று அப்டேட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் பெயர் 'புறநானூறு' என்றும் அறிவித்தது படக்குழு. இது, ஜி.வி.பிரகாஷின் 100 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் 'கங்குவா' படப்பிடிப்பு முடிவடைந்ததும், இப்படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

embed

புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படம்

Rustic. Powerful. Strong🔥 @Suriya_offl @dulQuer #Nazriya @MrVijayVarma in #Suriya43 A film by @Sudha_Kongara A @gvprakash Musical #Jyotika @rajsekarpandian @meenakshicini #GV100 pic.twitter.com/HF5ZpJU9Au— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 26, 2023