
சூர்யாவின் கங்குவா டீஸர் மும்பையில் ப்ரைம் வீடியோ நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது
செய்தி முன்னோட்டம்
சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'.
இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இதற்கான அறிவிப்ப்பை எந்தவித சலசலப்பும் இன்றி திடீரென நேற்று தயாரிப்பாளர்கள் குழு அறிவித்திருந்தனர்.
அதன் படி, இன்று மார்ச் 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சொன்ன நேரத்தை விட சற்றே தாமதமாகத்தான் டீஸர் வெளியானது.
காரணம் இந்த டீசரை சூர்யா நேரடியாக மும்பையில் நடைபெறும் ப்ரைம் இந்தியா விழாவில் வெளியிட்டார்.
'கங்குவா' திரைப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
அதோடு, வில்லனாக அனிமல் படப்புகழ் இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். இவருடைய ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கங்குவா
படத்தை பற்றி சில செய்திகள்
இந்த படத்தில் சூர்யா ஐந்து வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்தினை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
கங்குவா படம் 2024 இல் வெளியிடப்பட உள்ளது, இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி மற்றும் மாதம் இன்னும் வெளியிடப்படவில்லை.
கங்குவா பல மொழிகளில் 2D, 3D மற்றும் IMAX வடிவங்களில் வெளியிடப்படும்.
இப்படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் தான் பட வெளியீட்டு தாமதகிறது என கூறப்பட்டது. அதோடு, படத்தின் டப்பிங் வேலைகளும் நிறைவு பெற்று விட்டது.
ட்விட்டர் அஞ்சல்
கங்குவா டீஸர்
A glimpse of #Kanguva guys...!https://t.co/pgK6RmlZol
— Suriya Sivakumar (@Suriya_offl) March 19, 2024