LOADING...
சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது
சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது

சூர்யாவின் 'கங்குவா' நவம்பர் 14-ல் வெளியாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 19, 2024
01:06 pm

செய்தி முன்னோட்டம்

சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 'கங்குவா' அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் அதே நாளில் ரஜினியின் 'வேட்டையன்' வெளியாக இருப்பதால், சூர்யா தனது படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி புதிய வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 'சிறுத்தை சிவா' இயக்குகிறார் மற்றும் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3Dயில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியிடப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post