
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வினோத் கிஷன் நடிப்பை பாராட்டிய சந்தீப் கிஷன்
செய்தி முன்னோட்டம்
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரத்தியாக புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், பட வெளியீடு பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீரியாடிக் ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் பிரியங்கா மோகன்,சந்தீப் கிஷன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேற்று பிரத்தியேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழுவினர், முக்கிய நடிகர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தையும் அறிவித்தனர்.
தனுஷ், நிவேதா சதீஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் பிரிட்டிஷ் ராஜ்யத்தை எதிர்த்து போராடும் போராளிகளாக நடித்துள்ளனர்.
சந்தீப் கிஷன் பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
2nd card
வினோத் கிஷன் நான் மகான் அல்ல திரைப்படத்திற்காக பிரபலமடைந்தார்
படத்தில் வினோத் கிஷன் மற்றும் சந்திப் கிஷன் நடித்துள்ள காட்சியின் பிரத்தியாக புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த வினோத் கிஷன், சந்திப் கிஷன் நடிப்பை பாராட்டியுள்ளார்.
"அசாத்திய திறமையை கொண்ட வினோத் கிஷன்க்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள். படத்தில் இவரது காட்சியை கவனியுங்கள்" என சந்திப் கிஷன் பதிவிட்டுள்ளார்.
இவரின் ட்விட்க்கு பின், வினோத் கிஷன் இடமிருந்து சிறப்பான நடிப்பை எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
நடிகர் வினோத் கிஷன், நான் மகான் அல்ல, அந்தகாரம், இறைவன் உள்ளிட்ட படங்களில் அவரது கதாபாத்திரத்திற்காக நன்கு அறியப்பட்டவர்.
ட்விட்டர் அஞ்சல்
வினோத் கிஷன் திறமையான நடிகர்- வினோத் கிஷன்
A special Shout Out to the incredibly talented @vinoth_kishan in the picture ..
— Sundeep Kishan (@sundeepkishan) November 8, 2023
Watch out for his Part in the Film :)#CaptainMiller Pongal 2024 pic.twitter.com/vQCMV9My4p