
ராயன் பட வெற்றியால் நடிகர் தனுஷுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன்
செய்தி முன்னோட்டம்
ராயன் பட வெற்றியால் மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தனுஷிற்கு டபுள் டிரீட் கொடுத்துள்ளார். நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை அவரே இயக்கி நடித்தார்.
இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.
மேலும், செல்வராகவன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி வெளியான இந்த படம் சகோதர பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷ் நடிப்பைத் தாண்டி இயக்குனராகவும் இந்த படத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு கிடைத்தது.
கலாநிதி மாறன்
தனுஷிற்கு இரண்டு செக் கொடுத்த கலாநிதி மாறன்
படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன், தனுஷை நேரடியாக அழைத்து அவரது நடிப்பு மற்றும் இயக்கம் என்ற இரண்டிற்கும் தனித்தனியாக செக் கொடுத்துள்ளார்.
இதை சன் பிக்சர்ஸ் தனது சமூக ஊடக தளங்களில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, ஜெயிலர் பட வெற்றிக்காக நடிகர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு கார் வழங்கியதோடு, படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கியிருந்தார். இந்நிலையில், தற்போது ராயன் பட வெற்றிக்கும் ஊழியர்களுக்கு விரைவில் தங்க நாணயம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
சன் பிக்சர்ஸ் எக்ஸ் பதிவு
Mr. Kalanithi Maran congratulated @dhanushkraja for the grand success of #Raayan and presented 2 cheques to him - one for the hero and one for the director. pic.twitter.com/gp12Z8s6bl
— Sun Pictures (@sunpictures) August 22, 2024