
சுதா கொங்கராவின் 'சர்ஃபிரா' ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது
செய்தி முன்னோட்டம்
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகி பல தேசிய விருதுகளை அள்ளிய 'சூரரை போற்று' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக், 'சர்ஃபிரா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில், சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.
படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவுற்ற நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இத்திரைப்படம், வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்திற்கு இசையமைத்துள்ளது ஜிவி பிரகாஷ் குமார் தான்.
'சர்ஃபிரா' திரைப்படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார்.
இப்படத்தில் கௌரவ வேடத்தில் சூர்யாவும் நடித்துள்ளார் எனக்கூறப்படுகிறது.
ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கையை தழுவி உருவானது இந்த திரைப்படம்.
ட்விட்டர் அஞ்சல்
'சர்ஃபிரா' ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது
A common man's uncommon dream to make every Indian fly!✈️
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) June 14, 2024
Watch this Sarfira follow his crazy dream! #Sarfira only in cinemas on 12th July, 2024.@akshaykumar #RadhikkaMadan @SirPareshRawal @Sudha_Kongara #Jyotika @Suriya_offl @vikramix@rajsekarpandian @vbfilmwala… pic.twitter.com/8KJHnZjHUG