Page Loader
பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்தார்; வெளியான அதிர்ச்சி காட்சிகள்
'வேட்டுவம்' படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்தார்

பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்தார்; வெளியான அதிர்ச்சி காட்சிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2025
10:07 am

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் 'வேட்டுவம்' படப்பிடிப்பின் போது, நடந்த ஒரு ரிஸ்க்கான கார் ஸ்டண்ட் காட்சியில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் (வயது 52) உயிரிழந்தார். அந்த படப்பிடிப்பு காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சண்டைக்காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட கார் வானத்தில் பறந்து இரண்டு முறை சுழன்று கீழே விழுகிறது. காரை ஒட்டிய மோகன் ராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 'வேட்டுவம்' படத்தை பா.ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

விபத்தின் விவரங்கள்

'வேட்டுவம்' படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில், ஜூலை 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று காலை 10:40 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. முதலில் கார் விபத்தில் இறந்ததாக கூறப்பட்டாலும், படக்குழு வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது. மோகன் ராஜ், சண்டைக் காட்சியின் போது ஜீப்பிலிருந்து குதிக்கும் முயற்சியில் இருந்தார். அதே நேரத்தில் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட படக்குழுவினர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரை அழைத்து சென்றனர். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.