வின்டேஜ் சிம்பு லுக் உருவானது எப்படி; வெளியான வீடியோ
நடிகர் சிலம்பரசனின் 49வது படமான STR49 படத்தில் வின்டேஜ் சிம்புவின் லுக்குடன் சிம்பு நடிக்கப்போகிறார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பும், வின்டேஜ் லுக்கில் சிம்பு இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இப்படத்தினை AGS நிறுவனம் தயாரிக்க, 'ஓ மை கடவுளே' படத்தினை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இவர் தீவிர சிம்பு ரசிகர் என்பதை அவரே பல இடங்களில் பதிவு செய்துள்ளார். வின்டேஜ் லுக்கில் சிம்புவை கொண்டு வருவதற்கு அவர் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட இடங்களில் இருந்து உடைகள், பிரேஸ்லெட் உள்ளிட்டவைகளை வாங்கியதாக அவர் முன்னரே பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் வைரலான நிலையில், தற்போது வின்டேஜ் லுக்கில் சிம்பு தயாரான வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்தை தெரிவித்து தயாரிப்பு நிறுவனம் வீடியோவை வெளியிட்டுள்ளது.
Twitter Post
U saw vintage STR in a photo , time to see how the photo was made ! Making video of the photoshoot at 7PM on insta ! 🔥#VintageSTRmood Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood#AGS27#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@SilambarasanTR_ @Dir_Ashwath... pic.twitter.com/ZRtTDW9qA9— AGS Entertainment (@Ags_production) October 30, 2024