NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / STR 49: சிம்புவுடன் முதல் முறையாக இணையும் ராக்ஸ்டார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    STR 49: சிம்புவுடன் முதல் முறையாக இணையும் ராக்ஸ்டார்
    STR 49: வின்டேஜ் லுக்கில் சிம்பு

    STR 49: சிம்புவுடன் முதல் முறையாக இணையும் ராக்ஸ்டார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 23, 2024
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் சிலம்பரசன் STR 49 படத்திற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் இணைகிறார்.

    இதற்கான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன் வெளியானது.

    முன்னதாக சிலம்பரசன் STR 48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமியுடன் இணைவதாக தெரிவிக்கப்பட்டது.

    எனினும் அந்த படவேலைகள் தொடங்கும் முன்னரே அஸ்வத் மாரிமுத்துவின் படவேலைகள் டிசம்பர் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    STR 49இல், சிம்பு பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வின்டேஜ் லுக்கில் தோன்றவுள்ளார்.

    இதற்கான போஸ்டர் உடன் அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று சிம்புவுடன் ஒரு புகைப்படத்தை அஸ்வத் பகிர்ந்திருந்தார்.

    காளை, மன்மதன் காலத்து சிம்புவை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பதால், அதை போன்றதொரு தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கிறார் சிம்பு.

    இசையமைப்பாளர்

    இசையமைப்பாளர் யார்?

    இந்த நிலையில் STR 49 படத்திற்கு, சிம்புவின் ஃபேவரைட் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கபோவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

    மாறாக இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

    அப்படியென்றால், சிலம்பரசனுடன் அனிருத் இணையும் முதல் படம் இது.

    முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சிங்கள் பாடல் வெளியிட்டு சர்ச்சை ஆனது நினைவிருக்கலாம்.

    சிலம்பரசன் தற்போது கமல்ஹாசன் உடன் இணைந்து, மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிலம்பரசன்
    அனிருத்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சிலம்பரசன்

    தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு தனுஷ்
    இன்னும் ஒரு வருடத்திற்கு சிம்பு படம் இல்லை- ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதிய அப்டேட்  நடிகர்
    நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு  நடிகர் சங்கம்
    அதிக சம்பளம் கேட்டதால் பிரதீப் ரங்கநாதனை கைவிட்ட கமல்? விக்னேஷ் சிவன்

    அனிருத்

    இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார் தெலுங்கு திரையுலகம்
    525 கோடி தாண்டி வசூல் ஈட்டி வரும் 'ஜெயிலர்' திரைப்படம் ஜெயிலர்
    ஜெயிலர் BO கொண்டாட்டம்: இசையமைப்பாளர் அனிருத்திற்கு காசோலை வாங்கிய சன் பிக்ச்சர்ஸ்  ஜெயிலர்
    ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்  ஜெயிலர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025