STR 49: கட்டம் கட்டி கலக்க தயாராகும் சிம்பு; இயக்க போகிறார் அஸ்வத் மாரிமுத்து
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிலம்பரசனின் 49வது படமான STR49 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தினை AGS நிறுவனம் தயாரிக்க, 'ஓ மை கடவுளே' படத்தினை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இவர் தீவிர சிம்பு ரசிகர் என்பதை அவரே பல இடங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது அவரே சிம்புவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்கிறார்.
அஸ்வத் தற்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து டிராகன் படத்தை இயக்கி வருகிறார்.
மறுபுறம், சிம்பு, கமல்ஹாசன் உடன் இணைந்து, மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக அவர் தேசிங் பெரியசாமியுடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு STR-49 படத்திற்கு பின்னர் நடைபெறும்.
STR-49 படத்தின் படப்பிடிப்பு, வரும் டிசம்பர் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Super excited and happy to announce a much awaited collaboration with a dear friend and one of the most talented actors of our generation the one and only #STR in the magical world created by the super talented #Ashwath Marimuthu❤️🔥
— Archana Kalpathi (@archanakalpathi) October 21, 2024
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood#AGS27… pic.twitter.com/YOzG4kBH6R
லுக்
வின்டேஜ் லுக்கில் சிம்பு
முன்னதாக நேற்று இப்படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னோட்டமாக சிம்பு ஒரு ட்வீட் செய்திருந்தார்.
அதில், தம்+ மன்மதன்+வல்லவன்+ VTV ஆகிய சிம்புவின் மாஸ் என்டர்டைனர் படங்களின் கலவையாக Gen Z ரசிகர்களை கவர வரவிருப்பதாக தெரிவித்திருந்தார்.
2000'ஸ் காலகட்டத்தில் வெளியான சிம்பு படங்களுக்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர்.
அப்போதிருந்த சிம்புவின் துருதுரு நடிப்பிற்கும், அவரின் தனித்துவமான காதல் படங்களுக்கும் ஏங்கிய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்றைய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஒரு கையில் தம் பட ஸ்டைலில் கெர்சீப், மற்றொரு கையில் மன்மதன் படத்தின் டாட்டூ என வின்டேஜ் சிம்புவை நம் கண்முன்னே கொண்டு வந்து விட்டார்கள்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Dum + Manmadhan + Vallavan + Vtv
— Silambarasan TR (@SilambarasanTR_) October 19, 2024
in Gen Z mode = NAMBA NEXT !!! ❤️🔥