ஸ்பைடர் மேன் நடிகர்கள் Zendaya மற்றும் Tom Holland நிச்சயதார்த்தம்: அறிக்கை
செய்தி முன்னோட்டம்
ஹாலிவுட் நடிகர்கள் Zendaya மற்றும் டாம் ஹொலண்ட் ஆகியோர் பல ஆண்டுகளாக காதலித்து வருவதை செய்திகள் வெளியாகின.
எனினும் அவர்கள் இருவரும் இதுபற்றி பொதுவெளியில் பேசியது இல்லை. இந்த நிலையில் இந்த ஜோடி நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
TMZ படி, இந்த ஜோடி தங்கள் விடுமுறைக்கு சென்றபோது, ஒரு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இடையே நிச்சயதார்த்தம் செய்து கொண்டது.
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடையில், அமெரிக்காவில் உள்ள அவரது குடும்ப வீடு ஒன்றில், நடிகர் டாம், ஜெண்டயாவுக்கு ப்ரொபோஸ் செய்ததாக தம்பதியருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊகம்
ஊகத்தை தூண்டிய ஜெண்டயாவின் நிச்சயதார்த்த மோதிரம்
இவர்கள் இருவரும் தங்கள் உறவைப் பற்றி வாய் திறக்கவில்லை என்றாலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 82வது கோல்டன் குளோப்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஜெண்டயா தனது விரல்களில் பிரகாசமான வைர மோதிரத்தை பெருமையுடன் அணிந்திருந்ததே இந்த ஊகங்களைத் தூண்டியது.
நடிகர்கள் Zendaya மற்றும் Tom Holland முதன்முதலில் 2016 இல் Spider-Man: Homecoming படத்தின் போதே சந்தித்தனர்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ஒரு நிகழ்வில் ஒருவரையொருவர் முத்தமிடுவது போல புகைப்படம் வெளியானபோது தான் இவர்களின் காதல் விவகாரம் பொதுவெளியில் அதிகமாக பேசப்பட்டது.
வேலை முன்னணியில், கிறிஸ்டோபர் நோலனின் ஒடிஸியில் ஜெண்டயா மற்றும் டாம் ஹாலண்ட் மீண்டும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.