நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது காலணி வீச்சு
செய்தி முன்னோட்டம்
மறைந்த திரைப்பட நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் விஜய் மீது, காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவானும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நேற்று காலை நிமோனியா தொற்று காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரின் உடல், சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக, நேற்று இரவு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தபோது நடிகர் விஜய்யும், அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.
2nd card
அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் போது விஜய் மீது காலணி வச்சு
அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விஜய், உடலின் அருகில் சிறிது நேரம் கண்கலங்கியபடி நின்றது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில், விஜயகாந்த்க்கும், நடிகர் விஜயின் குடும்பத்திற்கும் நீண்ட தொடர்பு உண்டு.
விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்கள் விஜயகாந்த்க்கு, மெகா ஹிட் வெற்றி படங்களாக ஆனது. அதேபோல், நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்குள் வந்தபோது, செந்தூரப்பாண்டி உள்ளிட்ட சில படங்களில் விஜயகாந்த் உடன் நடித்திருந்தார்.
இது, விஜயின் சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. இதை, அவரே பல மேடைகளில் பேசியுள்ளார்.
இந்நிலையில், அஞ்சலி செலுத்திவிட்டு அவரது வாகனம் நோக்கி விஜய் சென்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி ஒரு காலணி வீசப்பட்டது. இது தொடர்பான, காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Wait what? 😲 somebody throws slipper on #Vijay #Vijayakanth#CaptainVijayakanth#RIPCaptainVijayakanthpic.twitter.com/d8RAGnAcDs
— 𒆜Harry Billa𒆜 (@Billa2Harry) December 28, 2023