தெலுங்கு நடிகர் நானியுடன் இணையும் எஸ்ஜே சூர்யா
நடிகர் நானியின் 31வது திரைப்படத்தில், எஸ்ஜே சூர்யா இணைவதாக அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்திற்காக நானி, இயக்குனர் விவேக் ஆத்ரேயா உடன் இரண்டாவது முறையாக இணைகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான 'அண்டே சுந்தராணிகி' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் படக்குழு அறிவித்தது. தற்போது எஸ்ஜே சூர்யாவும் இப்படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.