Page Loader
அக்டோபர் 31: தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்' 
தீபாவளிக்கு வருகிறான் அமரன்

அக்டோபர் 31: தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்' 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 17, 2024
05:03 pm

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. இந்த படம் வரும் அக்டோபர் 31, தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். 'India's Most Fearless' என்ற புத்தகத்தின் அடிப்படையில் உருவானது என கூறப்படுகிறது. இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி. கடந்தாண்டு துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்டது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பது ஜி.வி.பிரகாஷ். அயலானின் வெற்றிக்கு பிறகு வெளியாகவுள்ள இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

தீபாவளிக்கு வருகிறான் அமரன்