வெற்றிமாறன் கதையில், GVM இயக்கத்தில் மீண்டும் இணையும் சிம்பு!
நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் 'தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமியுடன் ஒரு படம் மற்றும் அஸ்வத் மாரிமுத்து உடன் ஒரு படமும் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் ஒரு படம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது வெற்றிமாறனின் கதை எனவும், அதனை GVM இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை GVM மற்றும் சிலம்பரசன் இணைவதாக இருந்தால், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் வெந்து தணிந்தது காடு வரிசையில் மற்றுமொரு படமாக அமையக்கூடும். அதே நேரத்தில் சிம்பு முதன்முறையாக வெற்றிமாறனுடன் இணைவதையும் இது குறிக்கும். வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார்.