Page Loader
SIIMA 2024: விருதுகளை குவித்த ரஜினியின் ஜெயிலர்
ஜெயிலருக்காக சிறந்த இயக்குனர் விருதை வென்ற நெல்சன்

SIIMA 2024: விருதுகளை குவித்த ரஜினியின் ஜெயிலர்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 16, 2024
01:56 pm

செய்தி முன்னோட்டம்

செப்டம்பர் 15 அன்று துபாயில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்(SIIMA)2024இல் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் பல விருதுகளை குவித்தது. அதன்படி, 2024 -ன் சிறந்த படமாக 'ஜெயிலரும்', சிறந்த இயக்குனருக்கான விருதை நெல்சன் திலிப் குமாரரும் பெற்றனர். அதேபோல், சிறந்த துணை நடிகருக்கான விருதை, அப்படத்தில் நடித்ததற்காக வசந்த் ரவி பெற்றார். மேலும், அப்படத்தில் இடம்பெற்ற 'ரத்தமாரே' பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன், சிறந்த பாடலாசிரியர் விருதினை பெற்றார். இந்த விருதினை மேடையில் வாங்கி கொண்ட விக்னேஷ் சிவன், அதை தன் மனைவி நயன்தாராவுடன் பகிர்ந்து கொண்டது பார்ப்பவர்களை நெகிழ வைத்தது. சுவாரசியமாக 'அன்னபூரணி' படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

விக்கி-நயன்

ட்விட்டர் அஞ்சல்

2024-ன் சிறந்த படமாக ஜெயிலர் தேர்வு

ட்விட்டர் அஞ்சல்

சிறந்த இயக்குனர் நெல்சன்