Page Loader
ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா- விக்ரம் இணைய திட்டம்; வைரலாகும் தகவல்

ஷங்கரின் இயக்கத்தில் சூர்யா- விக்ரம் இணைய திட்டம்; வைரலாகும் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2024
07:22 pm

செய்தி முன்னோட்டம்

இணையத்தில் வைரலாகும் ஒரு தகவலின் படி, இயக்குனர் ஷங்கர் நடிகர் சூர்யா மற்றும் விக்ரமை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். வலைப்பேச்சு என்ற பிரபல யூட்யூப் பகிர்ந்த தகவல் படி, இயக்குனர் ஷங்கர், வீரயுக நாயகன் வேள்பாரியின் கதையை திரைப்படமாக்க திட்டமிட்டு வருகிறார். 3 பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். முன்னதாக சு.வெங்கடேசனின் வரலாற்றுப் புதினமான வீரயுக நாயகன் வேள்பாரியின் காப்புரிமையைக் வைத்துள்ளவர் என்ற முறையில், பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதைக் கண்டு கலங்கியதாகவும், சமீபத்தில் வெளியான ஒரு திரைப்பட டிரெய்லரில் நாவலின் முக்கியமான காட்சி பயன்படுத்தப்பட்டு உள்ளது வருத்தமளிப்பதாகவும் ஷங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

திட்டம்

ஷங்கரின் திரைப்பட திட்டங்கள்

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து இந்தியன் 3 மற்றும் கேம் ஜேஞ்சர் ஆகிய படங்களில் ஷங்கர் தீவிரமான பணியாற்றி வருகிறார். இந்தியன் 3 படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதேபோல, கேம் ஜேஞ்சர் திரைப்படத்தில், ராம் சரண், கியாரா அத்வானி ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம், டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.