Page Loader
ஜவான் படவெற்றிக்காக திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மற்றும் நயன்தாரா
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மற்றும் நயன்தாரா

ஜவான் படவெற்றிக்காக திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மற்றும் நயன்தாரா

எழுதியவர் Venkatalakshmi V
Sep 05, 2023
11:23 am

செய்தி முன்னோட்டம்

முதல்முறையாக பாலிவுட்டில் கால்பாதிக்கும் அட்லீ, முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கியுள்ளார். 'ஜவான்' என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம், இன்னும் இரு தினங்களில் திரைக்கு வரவுள்ள நிலையில், இன்று அதிகாலை, படத்தின் ஹீரோ ஷாருக்கான், திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ஷாருக்கானுடன், படத்தின் ஹீரோயின் நயன்தாரா, ஷாருக்கின் மகள் சுஹானா கான், நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர். இந்த படத்தின் ஆடியோ லான்ச், சென்ற வாரம், சென்னையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து துபாயில் படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர். அவருக்கும் இதுதான் முதல் ஹிந்தி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான்