LOADING...
பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான்
எட் ஷீரன், மார்ச் 16ஆம் தேதி, மும்பையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்

பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனுடன் டான்ஸ் ஆடும் ஷாருக்கான்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 14, 2024
08:03 am

செய்தி முன்னோட்டம்

'ஷேப் ஆஃப் யூ' பாடலை பாடிய பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடனமாடும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அவர்கள் ஷாருக்கின் சிக்னேச்சர் போஸை ஒன்றாக செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, எட் ஷீரன் செவ்வாயன்று பிரபல பின்னணிப் பாடகர் அர்மான் மாலிக்கைச் சந்தித்தார். அவர், 2020 ஆம் ஆண்டு வெளியான 'ஆலா வைகுந்தபுரமுலூ' திரைப்படத்தில், அர்மான் மாலிக் பாடிய சூப்பர்ஹிட் பாடலான 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடினர். எட் ஷீரன், மார்ச் 16ஆம் தேதி, மும்பையில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். அவரின், +-=/x (கணிதம்) என தலைப்பிட்டுள்ள ஆசியா மற்றும் ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மும்பையில் நிகழ்ச்சி நடத்துகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

எட் ஷீரனுடன் ஒரு சிக்னேசர் ஸ்டெப்!