Page Loader
தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன்
ஏஎல் விஜய் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் படத்தில், குழந்தை நட்சத்திரமாக சாரா அர்ஜுன் அறிமுகமானார்.

தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன்

எழுதியவர் Srinath r
Nov 10, 2023
06:16 pm

செய்தி முன்னோட்டம்

தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். தெலுங்கு படங்களை இயக்கி வரும் கௌதம், சாரா அர்ஜுனை நாயகியாக அறிமுகம் செய்கிறார். விஜய் தேவரகொண்டாவின் 12வது திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த வருடம் மார்ச் மாதம் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரபல நடிகரான ராஜ் அர்ஜுன் மகளான சாரா அர்ஜுன், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார். மேலும் இவர் ஏற்கனவே ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ள நிலையில், தற்போது தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

நாயகியாகும் சாரா அர்ஜுன்