
'லியோ'வை தொடர்ந்து 'விடாமுயற்சி'யிலும் வில்லனாகவும் சஞ்சய் தத்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். KGF படத்தில் ஆரம்பித்த இவரின் தென்னிந்திய சினிமா பயணம், தொடர்ந்து, விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
தற்போது, விஜயை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்திலும், அவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு, அஜித்தின் பிறந்தநாளான மே-1 அன்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு இந்த படத்தை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகி இருப்பது, அஜித்தின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சஞ்சய் தத்துடன், நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றொரு வில்லனாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
'விடாமுயற்சி'யிலும் சஞ்சய் தத்?
After #Leo with #ThalapathyVijay, #SanjayDutt in talks to play as villain in #AjithKumar's #Vidaamuyarchi
— VCD (@VCDtweets) August 31, 2023
© Valai Pechu