Page Loader
750 வாகனங்களுடன் பிரமாண்ட பொருட்செலவில் உருவான சலார் பட சண்டைக்காட்சி
750 வாகனங்களுடன் பிரமாண்ட பொருட்செலவில் உருவான சலார் பட சண்டைக்காட்சி

750 வாகனங்களுடன் பிரமாண்ட பொருட்செலவில் உருவான சலார் பட சண்டைக்காட்சி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2023
05:35 pm

செய்தி முன்னோட்டம்

'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள இந்த 'சலார்' திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகக்கூடும் என கூறப்படும் நிலையில், படத்தின் பிரமாண்டத்தை பறைசாற்றும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் சண்டைகாட்சிக்காக, 750 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளனராம். அதில், ஜீப், லாரி என பல வாகனங்கள் அடங்கியுள்ளதாம். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மலையாள நடிகர் பிரித்விராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லன்களாக நடிக்கின்றனர். இந்த திரைப்படம், வரும் டிசம்பர் 22 , திரைக்கு வரவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் ஒரு சேர வெளியாகவுள்ளது சலார்.

embed

பிரமாண்ட பொருட்செலவில் உருவான சலார்

சண்டை காட்சிக்கே 750 வாகனங்களா? ஹாலிவுட் படங்களுக்கு டப் கொடுக்கும் சலார் மேலும் படிக்க : https://t.co/i4lMCnf9O1#Salaar #Prabhas #MeenakshiChaudhary #PrithvirajSukumaran #ShrutiHaasan #cinema #news #MMNews #Maalaimalar pic.twitter.com/U3By1qioAM— Maalai Malar தமிழ் (@maalaimalar) November 4, 2023