NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம்
    மர்ம ஆசாமி ஷாருக்கானின் இல்லத்தையும் வேவு பார்த்தாக தகவல்

    சைஃப் அலி கான்-ஐ தாக்கியவர் ஷாருக்கானின் வீட்டிலும் நோட்டம் விட்டதாக போலீசார் சந்தேகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 17, 2025
    12:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, நடிகரை கத்தியால் குத்திய அந்த மர்ம ஆசாமி, இந்த வார தொடக்கத்தில் ஷாருக்கானின் இல்லத்தையும் வேவு பார்த்தாக மும்பை போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    சைஃப் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்த விஷயத்தை மேலும் விசாரிக்க ஒரு போலீஸ் குழு ஷாருக்கானின் இல்லமான "மன்னத்"க்கு சென்றது.

    அப்போது அங்கிருந்து பெறப்பட்ட CCTV காட்சிகளில் சந்தேக நபரை ஒத்த அடையாளங்களுடன் ஒரு நபர் ஷாருக்கான் வீட்டின் அருகே நடமாடியது தெரியவந்துள்ளது.

    சந்தேகம்

    சந்தேக நபர் ஷாருக் வீட்டிற்குள்ளும் நுழைய பார்த்தாரா?

    CCTV படி, ஜனவரி 14 அன்று ஷாருக்கானின் வீட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    மன்னத்தை ஒட்டிய ரெட்ரீட் இல்லத்தின் பின்புறத்தில் 6-8 அடி நீளமுள்ள இரும்பு ஏணியை வைத்து ஒருவர் மன்னாதி வளாகத்தை கண்காணிக்க முயன்றுள்ளார்.

    சைஃப் அலி கான் மீதான தாக்குதலில் ஈடுபட்ட அதே நபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும், அந்த நபர் தனியாக செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

    ஷாருக்கானின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இரும்பு ஏணி ஒரு நபரால் கையாள முடியாத அளவுக்கு கனமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

    கைது 

    விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபர்

    இதற்கிடையில், சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சத்குரு ஷரன் குடியிருப்பில் நடந்த சம்பவம் நடந்து 35 மணி நேரத்திற்கும் மேலாகியும் தாக்குதல் நடத்தியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    நடிகரின் இரண்டு ஊழியர்களையும் காயப்படுத்திய ஊடுருவிய நபரைக் கண்டுபிடித்து பிடிக்க மும்பை போலீசார் 35 குழுக்களை அமைத்துள்ளனர்.

    சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் விசாரணைக்காக மும்பை போலீசார் வெள்ளிக்கிழமை ஒருவரை பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைஃப் அலி கான்
    ஷாருக்கான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சைஃப் அலி கான்

    கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும் மும்பை
    சைஃப் அலி கான் தாக்குதல் சம்பவம்: தாக்குதல் நடத்தியவர் முதலில் செவிலியரிடம் ₹1 கோடி கேட்டுள்ளார் பாலிவுட்

    ஷாருக்கான்

    ஜவான் படத்தின் இரண்டாவது பாடல், 'ஹையோடா' வெளியானது பாடல் வெளியீடு
    'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள் இயக்குனர்
    அட்லீ- ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை வைரலாகி வருகிறது ஷாருக் கான்
    நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ் பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025