கரீனா எங்கிருந்தார்? ஏன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றார்? சைஃப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் முக்கிய கேள்விகளும், பதில்களும்
செய்தி முன்னோட்டம்
நடிகர் சைஃப் அலி கான், இன்று காலை அவரது மும்பை பாந்த்ரா வீட்டில் மர்ம நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.
அவர் தற்போது லீலாவதி மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அபாய கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து மும்பை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையை மும்பை காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தயா நாயக் பொறுப்பேற்று விசாரித்து வருகிறார்.
நடிகரை தாக்கிய அந்த நபர் கொள்ளையடிக்கும் முயற்சியில் வந்ததாகவும், நடிகரை தாக்கிவிட்டு தப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் பல முக்கிய கேள்விகளும், அதற்கான பதில்களும் இதோ உங்களுக்காக!
நேரம்
சைஃப் அலிகான் எப்போது, எங்கு, ஏன் தாக்கப்பட்டார்?
நடிகர் சைஃப் அலி கான், பாந்த்ராவில் உள்ள சத்குரு ஷரன் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் வசிக்கிறார்.
அங்கே அவர் தனது குழந்தைகள் அறையில் அதிகாலை 2:30 மணியளவில் தாக்கப்பட்டார்.
மர்ம நபரை உள்ளே பார்த்த ஆயா பயந்து கூச்சலிட, சைஃப் அறைக்குள் நுழைந்தார்.
பின்னர் நடிகர் மர்ம நபரை எதிர்த்து போராடியதில், கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது முதுகுத்தண்டுக்கு அருகிலும், கையிலும் ஆழமான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகை கரீனா வெளியிட்ட முதல் அறிக்கையில், மர்ம நபர் தங்கள் வீட்டிற்குள் திருட முயற்சிப்பதற்காக நுழைந்ததாகவும், அவரால் சைஃப் தாக்கப்பட்டார் என்பது தெரியவந்தது.
விசாரணை
முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர் எப்படி உள்ளே நுழைந்திருக்க கூடும் என கண்டுபிடிப்பு
மர்ம நபர், ஃபயர் எஸ்கேப் படிக்கட்டுகள் வழியாக நடிகரின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர்.
மர்ம நபரிடமிருந்து தனது குடும்பத்தாரை காப்பற்ற சைஃப் சண்டையிட்டதை அடுத்து, அவரை கத்தியால் குத்திவிட்டு அவர் ஓடிவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லையென்றாலும், வீட்டில் இருந்த ஒரு பெண் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தற்போது சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் வழக்கு தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கரீனா கபூர் கான்
சம்பவத்தின் போது கரீனா கபூர் கான் எங்கே இருந்தார்?
தாக்குதலில் கரீனா மற்றும் அவர்களது குழந்தைகளான தைமூர் மற்றும் ஜெஹ் ஆகியோர் காயமின்றி தப்பினர்.
சம்பவம் நடந்த போது மூவரும் வீட்டில் இருந்தனர்.
இந்தியா டுடே ஆதாரங்களின்படி, நடிகை கரீனா, தனது சகோதரி கரிஷ்மா கபூர், தயாரிப்பாளர் ரியா கபூர் மற்றும் அவரது சகோதரி நடிகை சோனம் கபூர் ஆகியோருடன் புதன்கிழமை இரவு இருந்தார்.
எனினும் சம்பவத்தின் போது அவரும் குழந்தைகளும் வீட்டில் தான் இருந்துள்ளனர்.
ஆட்டோ
சைஃப் அலி கானை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் மகன் இப்ராஹிம்
தாக்குதல் நடந்ததும் கரீனா கபூர், சைஃப் அலி கானின் மூத்த இப்ராஹீமை அழைத்துள்ளார்.
உடனே அவர்களின் இல்லத்திற்கு விரைந்த இப்ராஹிம், தனது தந்தையை ஆட்டோவில் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றுள்ளார்.
வீட்டில் அப்போது ஓட்டுனர்கள் யாருமில்லாத காரணத்தில், வீட்டில் இருந்த உதவியாளர் துணையுடன் ஆட்டோவில் நடிகரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது சைஃப் அலி கானிற்கு அறுவை சிகிச்சை நிறைவுற்று தற்போது அபாய கட்டத்திலிருந்து மீண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அவர் 2,3 நாட்கள் ICU வில் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.