Page Loader
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளை முயற்சி; நடிகர் கத்தியால் தாக்கப்பட்டார்
அவர் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளை முயற்சி; நடிகர் கத்தியால் தாக்கப்பட்டார்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2025
08:29 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் பாந்த்ரா வீட்டிற்குள் இன்று அதிகாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர், அவரது வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடிகரை கத்தியால் தாக்கியுள்ளார். அதில் குறைந்தது ஆறு முறை சைஃப் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அதில் இரண்டு ஆழமான வெட்டு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, சைஃப் மும்பையின் லீலாவதி மருத்துவமனையில் அதிகாலை 3.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

அறிக்கை

காவல்துறை அறிக்கை கூறுவது என்ன?

காவல்துறையின் கூற்றுப்படி, நேற்று நள்ளிரவு மர்ம நபர், சைஃப் அலி கானின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர், இருவரும் சண்டையிட்டனர், இதன்போது நடிகர் கத்தியால் குத்தப்பட்டார். சம்பவத்தின் போது நடிகரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் வீட்டில் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்வதை உறுதி செய்ய மும்பை காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இது குறித்து குடும்பத்தாரிடம் இருந்தும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "திரு சைஃப் அலி கான் வீட்டில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வருகிறார். ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது போலீஸ் விவகாரம். நிலைமை குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனை அறிக்கை

ஆழமான வெட்டுக்காயங்களுடன் நடிகர் அனுமதி

லீலாவதி மருத்துவமனை, ஒரு அறிக்கையில், சைஃப் அலி கான் குறைந்தது ஆறு முறை குத்தப்பட்டதாகவும், இரண்டு ஆழமான வெட்டுக்களுடன் இருப்பதாகவும் கூறியது. மேலும், கத்தியால் ஏற்பட்ட காயம் ஒன்று அவரது முதுகு தண்டுவடத்திற்கு மிக அருகில் இருந்தது எனவும் கூறப்பட்டுள்ளது. "சாய்ஃப் அலி கான் தனது பாந்த்ரா வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் குத்தப்பட்டு, அதிகாலை 3:30 மணியளவில் கொண்டு வரப்பட்டார். அவருக்கு ஆறு கத்தி காயங்கள் இருந்தன. அதில் இரண்டு ஆழமானவை. இதில் ஒன்று முதுகுத்தண்டுக்கு அருகில் உள்ளது. அவருக்கு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் தலைமையிலான டாக்டர்கள் குழு மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது." லீலாவதி மருத்துவமனை கூறியது