Page Loader
விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா?
விஜய் வர்மாவும்- தமன்னாவும் பல மாதங்களாக காதலித்து வருகின்றனர்.

விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா?

எழுதியவர் Srinath r
Nov 15, 2023
11:20 am

செய்தி முன்னோட்டம்

தனது காதலரும் நடிகருமான விஜய் வர்மாவை, நடிகை தமன்னா பாட்டியா விரைவில் திருமணம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் சீரிஸில் நடிக்கும் போது, தங்கள் காதலை விஜய் வர்மாவும், தமன்னாவும் ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது, அவர்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் வர்மாவும்-தமன்னாவும் மணமுடிப்பது பற்றி தீவிரமாக யோசித்து வருவதாகவும், தமன்னாவின் பெற்றோர் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதால், அவர் மணமுடிக்க அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகும் தெலுங்கு சினிமா என்ற ஊடகம் கூறியுள்ளது. மேலும், திருமணத்திற்காகவே புதிய படங்களில் எதுவும் தமன்னா ஒப்பந்தமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. கடைசியாக, ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பாடலிலும், போலா சங்கர் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

2nd card

திருமணம் என்பது ஒரு பெரிய பொறுப்பு- தமன்னா

நடிகை தமன்னா தான் 18 வருடமாக சினிமாவில் நடித்து வருவதாகவும், முதலில் தன் சினிமா வாழ்க்கை 8-10 ஆண்டுகள் வரை மட்டுமே நீடிக்கும் என தான் கருதியதாகவும், 30 வயதில் திருமணம் செய்யலாம் என தான் நினைத்ததாக, கடந்த ஜூலை மாதம் இந்தியா டுடேவிடம் தெரிவித்திருந்தார். மேலும் திருமணம் பற்றி பேசியவர், "நீங்கள் திருமணம் செய்ய விரும்பும் போது நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்." "திருமணம் என்பது பார்ட்டி அல்ல. திருமணம் என்பது ஒரு மிக மிகப்பெரிய பொறுப்பு" எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.