'பாண்டியம்மா' இந்திரஜா திருமணம்: பிரபலங்களை நேரில் சென்று அழைக்கும் ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவருக்கும், இவரது உறவினரான 'தொடர்வோம்' கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக தெரிவித்திருந்தோம். அதன்படி, இவர்களுக்கு தற்போது திருமண தேதி குறித்து விட்டார்கள். திருமண பத்திரிகையும் அடித்தாகி விட்டது என செய்திகள் கூறுகின்றன. ரோபோ ஷங்கர், திரைத்துறையில் பிரபலமான நடிகர். இவரது மகள் இந்திரஜாவும், பிகில், விருமான் போன்ற படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக, 'பிகில்' திரைப்படத்தில் இவர் நடித்திருந்த 'பாண்டியம்மா' கதாபாத்திரத்தாலேயே, இவரை மக்கள் இன்றும் விளிக்கின்றனர். தந்தையும் மகளும், திரைத்துறையில் இருப்பதாலும், ரோபோ ஷங்கர் தீவிரமான கமல் ரசிகர் என்பதாலும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு, தன் குடும்பத்தாரோடு நேரில் சென்று திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்-ஐ நேரில் சந்தித்த ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கர் சில காலம் முன்னர் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கமல் உதவிக்கரம் நீட்டியதாக அவரது மனைவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதே போல, தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தன் குடும்பத்தாரோடு நேரில் சென்று திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் ரோபோ ஷங்கர். அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. எனினும், இவர்கள் திருமண தேதி குறித்தோ, எங்கு திருமணம் நடைபெறவுள்ளது என்பது குறித்தோ எந்த தகவலும் இல்லை. தற்போது இந்திரஜா திருமணம் செய்யவிருக்கும் 'தொடர்வோம்' கார்த்திக், 'தொடர்வோம்' என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறார் இல்லத்தை நடத்தி வருகிறார்.