'பாண்டியம்மா' இந்திரஜா 'ரோபோ' ஷங்கருக்கு திருமணம்!
விஜய்- அட்லீ காம்போவில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரம் மூலம், கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் இந்திரஜா 'ரோபோ' ஷங்கர். பிரபல காமெடி நடிகர் 'ரோபோ' ஷங்கரின் ஒரே மகளான இந்திரஜா, சோஷியல் மீடியாவில் பிரபலமானவர். அவ்வப்போது தனது குடும்பத்தாருடன் ரீல்ஸ், போட்டோஸ் என பதிவேற்றுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக, அவரது குடும்ப உறுப்பினரான 'தொடர்வோம்' கார்த்திக் என்பவருடன் அடிக்கடி புகைப்படம் பதிவேற்றுவதும், அவரை அன்போடு 'மாமா' என அழைப்பதுமாக இருந்தார். இதை குறித்து இந்திராஜாவின் ரசிகர்கள் அவரிடம் "அவரை கல்யாணம் செய்ய போறீங்களா?" என கேள்வி கேட்டனர். அதற்கு இந்திரஜா, "இன்னும் தேதி முடிவு பண்ணல. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்!" என்று பதில் அளித்துள்ளார்.