
'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை; தேசிய விருது உட்பட நகைகள் திருட்டு
செய்தி முன்னோட்டம்
'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். அவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
'காக்கா முட்டை' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மணிகண்டன்.
அதனை தொடர்ந்து, விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற குற்றமே தண்டனை, விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களை இயக்கினார்.
இயக்குனர் மணிகண்டனின் சொந்த ஊர், உசிலம்பட்டியை அடுத்த விளாம்பட்டியில் அவரது சொந்த வீடு உள்ளது.
அந்த வீடு கடந்த 2 மாதங்களாக பூட்டப்பட்டிருந்தது.
இதனை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.1 லட்சம் ரொக்க பணம், 5 பவுன் தங்க நகை மற்றும் 2 தேசிய விருது பதக்கங்கள் ஆகியற்றை கொள்ளையர்கள் திருடியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
'காக்கா முட்டை' இயக்குனர் வீட்டில் கொள்ளை
இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருட்டு
— Thanthi TV (@ThanthiTV) February 8, 2024
மதுரை, உசிலம்பட்டி அருகே தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருட்டு
காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டனின் வீட்டு பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ₨1 லட்சம் ரொக்கம் திருட்டு #thanthitv #Director #manikandan pic.twitter.com/1sk0MYEvjn