
தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள்
செய்தி முன்னோட்டம்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவின் ரசிகரான ரேணுகாசுவாமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் உள்ள நடிகரின் வீட்டில் உடைகள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இரவில் அவர் அணிந்திருந்த உடைகள் தர்ஷனின் வீட்டு மாடியிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
இந்த ஆடைகள், தர்ஷனின் மனைவி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட காலணிகள் மற்றும் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், பிரேதப் பரிசோதனையில் ரேணுகாசுவாமி கொடூரமாக தாக்கப்பட்டு, அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு காரணமாக பல அப்பட்டமான காயங்கள் ஏற்பட்டதன் விளைவாக இறந்துவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், ரேணுகாசுவாமி உதைக்கப்பட்டதாகவும், விதைப்பையில் சிதைவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலாளர் தற்கொலை
நடிகர் தர்ஷனின் பண்ணை இல்ல மேலாளர் தற்கொலை
இதற்கிடையே நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டின் மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு முன்னதாக மேலாளர் பதிவு செய்துள்ள ஒரு வீடியோ செய்தியில், மேலாளர் அவர் கடுமையான மன அழுத்தத்துடன் போராடி வருவதாக வெளிப்படுத்தினார்.
ஆனால் இந்த கொலைக்கும் மேலாளருக்கு சம்மந்தம் இல்லையெனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலாளர் கடந்த மாத இறுதியில் மயமானதாகவும், அவரது சடலம் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இறந்தவரின் தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோவில், ஸ்ரீதர் தனது குடும்பத்தினரை இந்த வழக்கில் எந்த விசாரணையிலும் ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் சடலத்துடன் தற்கொலை கடிதமும் கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
மாயமான அசிஸ்டன்ட்
பணத்தை களவாடியவர் 8 வருடங்களாக மாயம்
ஒன்இந்தியாவின் அறிக்கையின்படி , மல்லிகார்ஜுன் என்பவர் தர்ஷனுடன் பணிபுரிந்தார்.
அவரது திரைப்பட அட்டவணைகள் மற்றும் பல்வேறு விவகாரங்களை நிர்வகித்தார்.
ஆனால் அவர் 2016 முதல் காணவில்லை. கால்ஷீட் பணிகளை தாண்டி அவர் படத்தயாரிப்புகளிலும், விநியோகத்திலும் இறங்கினாராம்.
அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்தததாக கூறப்படுகிறது.
அவருக்கு கடன் கொடுத்தவர்களில் பிரபல நடிகர் அர்ஜுனும் ஒருவர். கிட்டத்தட்ட ₹ 1 கோடி கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அர்ஜுன் மோசடி வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
மல்லிகார்ஜுன், தர்ஷனிடம் இருந்து சுமார் ₹2 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் மாயமான நிலையில் அவர் வாங்கிய கடனும், அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் நிலுவில் உள்ளது.