எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா; அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள பிரமாண்ட திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
இசை உலகின் முடிசூடா ராணியாகவும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. 'எம்.எஸ். - ஏ லெகசி ஆன் ஸ்கிரீன்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்தை 'ஜெர்சி' புகழ் இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்க, பாறை போன்ற பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அல்லு அரவிந்த், பன்னி வாசு மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#NM23Prime @posterboyoffl
— Nikil Murukan (@onlynikil) September 15, 2026
M.S. – A Legacy on Screen.
Rashmika Mandanna, will portray
M.S. Subbulakshmi
Anirudh Ravichander as music composer.
Allu Aravind, Rockline Venkatesh and Bunny Vasu Produces
Directed by Gowtam Tinnanuri
On the occasion of her 110th birth… pic.twitter.com/T9otQAmJR4
தொடக்கம்
அனிருத் இசை & செப்டம்பர் 16 பிரம்மாண்ட தொடக்கம்
இசைப் பின்னணி கொண்ட வரலாற்று சிறப்புமிக்க இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 16 அன்று சென்னையில் இந்தப் படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
நிகழ்வில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
இந்தியன் கோரல் என்செம்பிள் குழுவினரின் இசை அஞ்சலியும் இதில் இடம் பெறவுள்ளது.
சாகுந்தலை மற்றும் மீரா போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்து, திரைப்படத் துறையிலும் முத்திரை பதித்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.
அவரது கதாபாத்திரத்தை ஏற்பது ராஷ்மிகா மந்தனாவின் திரைப்பயணத்தில் மிகச் சவாலான ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
முன்னதாக, இக்கதாபாத்திரத்திற்காக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.