Loading...
ரூ.4,000 கோடி பட்ஜெட்டா? ஹாலிவுட் கணக்கை உடைத்துப் பேசிய ராமாயணம் தயாரிப்பாளர் யாஷ்
ராமாயணம் திரைப்படத்தின் ரூ.4,000 கோடி பட்ஜெட் என நடிகர் யாஷ் விளக்கம்

ரூ.4,000 கோடி பட்ஜெட்டா? ஹாலிவுட் கணக்கை உடைத்துப் பேசிய ராமாயணம் தயாரிப்பாளர் யாஷ்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 16, 2026
05:35 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ராமாயணம் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு ரூ.4,000 கோடி என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் ராவணனாக நடிக்கும் நடிகருமான யாஷ், ஆப் கி அதாலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த பட்ஜெட் சர்ச்சை குறித்துத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தொகையானது படம் குறித்த தவறான புரிதலால் பரப்பப்பட்ட ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹாலிவுட் பாணி சந்தைப்படுத்தல்

பட்ஜெட் தொகையின் பின்னணி

ராமாயணம் படத்தின் ரூ.4,000 கோடி பட்ஜெட் குறித்துப் பேசிய யாஷ், "இது ஒரு மிகப்பெரிய தவறான புரிதல்.

ரூ.4,000 கோடி என்பது இரண்டு பாகங்களாக உருவாகும் ஒட்டுமொத்த படம், அதன் சர்வதேச ரிலீஸ் மற்றும் விளம்பர செலவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய தொகையாகும்." என்று கூறினார்.

ஹாலிவுட் திரைப்படங்களைப் போலவே தயாரிப்பு செலவிற்கு இணையான தொகையை சர்வதேச அளவில் விளம்பரம் செய்ய செலவிடுவதால் இந்தத் தொகை அதிகமாகத் தெரிகிறது என்றும், உலகளாவிய சந்தையில் இருந்து இதற்கான வருவாயும் பிரம்மாண்டமாகக் கிடைக்கும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

இந்திய சினிமா

இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் செல்லும் முயற்சி

இந்திய சினிமாவை சர்வதேச அளவிற்கு உயர்த்த இத்தகைய மிகப்பெரிய முதலீடுகள் அவசியம் என்று யாஷ் வலியுறுத்தினார்.

சினிமா என்பது ஒரு நாட்டின் கலாச்சார வலிமை எனக் குறிப்பிட்ட அவர், இந்தியக் கதைகளை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

ராமாயணம் மற்றும் அவரது அடுத்த படமான டாக்ஸிக் ஆகியவை இந்தியச் சினிமாவை உலகளவில் நிலைநிறுத்துவதற்கான முக்கிய முயற்சிகளாகும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளமும் சர்வதேச இசையமைப்பாளர்களும்

இந்த பிரம்மாண்ட காவியத் திரைப்படத்தில் ராராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி துபே மற்றும் அனுமனாக சன்னி தியோல் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும், சர்வதேசப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் காட்சியமைப்புகள் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் பிரம்மாண்டம் குறித்த விவாதங்கள் இணையத்தில் தொடர்கின்றன.

ADVERTISEMENT

வெளியீட்டுத் தேதி

உலகளாவிய திரையரங்கு வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு

ராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம் சர்வதேச திரையரங்குகளில் நவம்பர் 6 அன்றும், இந்தியாவில் நவம்பர் 8 அன்றும் திரைக்கு வரவுள்ளது.

இதைத் தொடர்ந்து, திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பு உறுதி செய்துள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த காவியத் திரைப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT