உத்தர பிரதேச துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
லக்னோ சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் இணைந்து ஜெயிலர் படம் பார்த்தார்.
முன்னதாக, லக்னோவில் படத்தின் சிறப்பு திரையிடுதலுக்கு முன்னதாக, சனிக்கிழமை ரஜினிகாந்த் ராஜ்பவனில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை சந்தித்தார்.
உத்தரபிரதேச ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வருகையின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சனிக்கிழமை மாலை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளதாகவும், அவரோடு இணைந்து ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களும் ஜெயிலர் படம் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
rajinikanth to visit ayodhya
ஞாயிற்றுக்கிழமை அயோத்தி செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
லக்னோ பயணத்தை முடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அயோத்திக்கும் செல்ல உள்ளார்.
ஜெயிலர் ரிலீஸுக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றிருந்தார். வியாழக்கிழமை, இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பின்னர், ராஞ்சியில் ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்தார்.
"ராஞ்சிக்கு அவர் வந்தடைந்தபோது, இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரும், சிறந்த மனிதநேயமிக்க சூப்பர் ஸ்டாருமான, எனது அன்பு நண்பரை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரஜினிகாந்துடன் நேற்று ராஜ்பவனில் மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஜார்க்கண்டின் பெரிய நிலத்திற்கு அவரை நான் மனதார வரவேற்கிறேன்." என்று சி.பி.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.