ரஜினியின் 'வேட்டையன்' வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, TJ ஞானவேல் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனும் நடித்துள்ளார். அதோடு இந்த படத்தில் பஹத் பாசில், மஞ்சு வாரியார், ராணா டகுபதி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசையமைத்திருப்பது அனிருத் ரவிச்சந்தர். இந்த படத்தின் ஷூட்டிங் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
'வேட்டையன்' ரிலீஸ்
#CinemaUpdate | தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என பட நிறுவனம் அறிவிப்பு!#SunNews | #VETTAIYAN | #Rajinikanth | @rajinikanth | @SrBachchan | @tjgnan | @anirudhofficial pic.twitter.com/FjqzGFuhou— Sun News (@sunnewstamil) April 7, 2024