
பொங்கலுக்கு ரஜினி ரசிகர்களுக்கு வெளியாகவுள்ள டபுள் ட்ரீட்
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது T.J.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'ஜெயிலர்' படத்திற்கு பிறகு 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர், இளம் இயக்குனர்களுடன் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் 'ஜெய் பீம்' திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த பொங்கல் பண்டிகைக்கு சூப்பர்ஸ்டார் படம் எதுவும் வெளியாகவில்லையே சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, பொங்கல் பரிசாக இப்படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று காலை வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில், பஹத் பாசில், அமிதாப் பச்சன், ராணா மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த திரைப்படம், ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினி ரசிகர்களுக்கு வெளியாகவுள்ள டபுள் ட்ரீட்
#VETTAIYAN’s colourful wishes! 😎 Revealing the poster TOMORROW at 9:15 AM!
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 14, 2024
pic.twitter.com/EpIUTGKJgt