
வேட்டையன் படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ்! எங்கே எப்போது பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, TG ஞானவேல் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'.
இந்த படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
வேட்டையன் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ரூ. 90 கோடிக்கு வாங்கியுள்ளது.
செய்திகளின் படி, நவம்பர் 7, 2024 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் 'வேட்டையன்' ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும்.
எனினும் இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. வேட்டையன் படத்தில், ரஜினிகாந்த் போலீசாக நடித்துள்ளார்.
இவருடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் உள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Vettaiyan Tamil Version HD Print Streaming Now On Overseas #OTT . .#VettaiyanOnOTT#VettaiyanOnPrime Premieres Coming Soon .#Rajinikanth #anirudh #Coolie #manjuwarrier #Rajini #Thalaivar #AmitabhBachchan
— DIGITAL OTT PLATFORM (@Digital_OTT) October 24, 2024
Follow ✴️ @Digital_OTT pic.twitter.com/NeKQjpyTfZ