LOADING...
ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் தேதி உறுதியானது!
ரஜினிகாந்தின் வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரும்

ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் தேதி உறுதியானது!

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2024
10:03 am

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' பட வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் T.J.ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில், படத்தில் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நேரடியாக தமிழ் படத்தில் முதன்முறையாக நடிக்கிறார் என்பது கூடுதல் சுவாரசியம். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து படத்தை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. படம் அக்டோபர் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசை, அனிருத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

வேட்டையன் ரிலீஸ்