
ரஜினிகாந்தின் 'பாட்ஷா' வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு; ஜூலை 18 மீண்டும் ரிலீஸ்
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்தின் க்ளாசிக் அதிரடித் திரைப்படமான பாட்ஷா வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் நாளை, ஜூலை 18, 2025 அன்று இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படம், முதலில் 1995 இல் வெளியானது. இந்த படம் ரஜினியின் திரைவாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம், தமிழ் சினிமாவின் மிகவும் பாராட்டப்பட்ட படங்களிலும் ஒன்றாகவும் மாறியது. தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ள இந்த படம், ரசிகர்களின் அனுபவத்திற்காக மேம்படுத்தப்பட்ட 4K காட்சிகள் மற்றும் டால்பி அட்மாஸ் ஒலி சேர்க்கப்பட்டு திரையிடப்படவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The iconic Tamil film #Baasha is indeed being re-releasing in 4K with Dolby Atmos sound technology. To celebrate the film's 30th anniversary & @sathyamovies 60th golden jubilee, the makers are bringing back this classic gangster drama starring #SuperstarRajinikanth &… pic.twitter.com/A4rtDreUEB
— RIAZ K AHMED (@RIAZtheboss) July 16, 2025
விவரங்கள்
தமிழ் கேங்ஸ்டர் படங்களுக்கு 'பாஷா' ஒரு புதிய பாதையை அமைத்தது
தமிழ் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பாதையை அமைத்தது பாட்ஷா திரைப்படம். ஆர்.எம் வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த இந்த படத்தில், ரகுவரன், நக்மா, விஜயகுமார், ஜனகராஜ் மற்றும் தேவன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவாவின் இசையமைப்பில் உருவான பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது. இந்த மறு வெளியீடு இந்த கிளாசிக் படத்தை இளம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு நோஸ்டால்ஜிக் அனுபவத்தையும் வழங்குகிறது.