
வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் நடிகர் நடிகைகளுக்கு, தனியாக ஒரு சங்கம் இருப்பது அறிந்திருப்பீர்கள். நடிகர் சங்கம் என்று அழைக்கப்படும் அந்த சங்கம் உருவாக காரணமாக இருந்தவர், MGR.
நடிகர்களுக்கிடையே வேறுபாடு இருக்க கூடாது என்று அதை 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என பெயரிட்டவரும் அவர்தான் என கூறுவார்கள்.
அந்த நடிகர் சங்கத்தின் தலைவராக சிவாஜி கணேசனும் இருந்துள்ளார்.
அதன் பின்னர் பலர் அந்த சங்கத்தின் தலைமை பொறுப்பை வகித்தனர்.
இந்நிலையில், விஜயகாந்த் அதன் தலைமை பொறுப்பை ஏற்ற போது, நடிகர் சங்கத்தில் ஏகப்பட்ட கடன் இருந்ததாகவும், சங்கம் ஆரம்பித்ததன் நோக்கமே நிறைவேறாமல் இருந்ததாகவும் கூறுவார்கள்.
அதனால் விஜயகாந்தின் சீரிய முயற்சியில், நடிகர் நடிகைகளை ஒன்றிணைத்து, முதல்முறையாக வெளிநாடுகளில் நட்சத்திர கலைவிழாவை ஏற்பாடு செய்தனர்.
card2
மலேசியாவில் மாற்ற உடை இன்றி தவித்த ரஜினி
மலேசியாவில் நடைபெற்ற அந்த கலைவிழாவில் கிட்டத்தட்ட அனைத்து திரைநட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் முதல் ஆளாக விழாவிற்கு வர சம்மதித்தார். அதோடு, அனைவரோடும் சேர்ந்தே ஒரே விமானத்தில் பயணம் செய்தார்.
அப்போது அவரது துணிமணிகள் இருந்த பேக்கேஜ் விமான நிலையத்தில் மிஸ் ஆகிவிட்டதாம்.
மாற்று உடை வாங்கவும் நேரமில்லாத காரணத்தால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தாராம்.
உடனே விஜயகாந்த் அவருடைய ஷர்ட்-ஐ தந்தாராம். ஆனால் அது சற்றே பெரிய சைஸ் போல.
ஆனால் ரஜினி, எந்தவித ஈகோவும் இன்றி, அதை அணிந்து கொண்டு மேடை ஏறினாராம்.
அப்போதிருந்த நட்சத்திரங்கள் யாரும் ஈகோ இன்றி சகஜமாக பழகியதை கேட்டு, இன்றும் ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.