Page Loader
அல்லு அர்ஜுன்- இயக்குனர் சுகுமார் கருத்து மோதல்களுக்கு இடையே புஷ்பா 2 தி ரூல் கிளைமாக்ஸின் படப்பிடிப்பு துவங்கியது 
'புஷ்பா 2: தி ரூல்' படப்பிடிப்பு இறுதியாக மீண்டும் தொடங்கியுள்ளது

அல்லு அர்ஜுன்- இயக்குனர் சுகுமார் கருத்து மோதல்களுக்கு இடையே புஷ்பா 2 தி ரூல் கிளைமாக்ஸின் படப்பிடிப்பு துவங்கியது 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2024
05:31 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் சுகுமாருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பல வாரங்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' படப்பிடிப்பு இறுதியாக மீண்டும் தொடங்கியுள்ளது. புஷ்பாவின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில், இன்று திங்கள்கிழமை படத்தின் கிளைமாக்ஸ் படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 'புஷ்பா 2' திரைப்படம் வரவுள்ள டிசம்பர் 6-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக சுகுமாருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பல செய்திகள் வெளியாகின. அல்லு அர்ஜுன் தனது தாடியை கொஞ்சம் ட்ரிம் செய்துவிட்டு குடும்பத்துடன் ஐரோப்பிய விடுமுறைக்கு சென்றபோது, ​​ரசிகர்கள் இதனை உறுதி செய்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

புஷ்பா 2 தி ரூல் கிளைமாக்ஸ்